இந்தியாவில் அறிமுகமாகிறது Y93 ஸ்மார்ட்தொலைபேசி!

இந்தியாவில் அறிமுகமாகிறது Y93 ஸ்மார்ட்தொலைபேசி!

விவோ நிறுவனம் Y93 ஸ்மார்ட்தொலைபேசியை இந்தியாவில் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு முன்னர் குறித்த தொலைபேசியை அந்நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்திருந்தது.

இந்த Y93 ஸ்மார்ட் தொலைபேசியில் புகைப்படங்களை எடுப்பதற்கு 13 எம்.பி.பிரைமரி கேமரா, 2 எம்.பி.இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி.செல்ஃபி கேமரா ஆகியன காணப்படுகின்றன.

மேலும் இத்தொலைபேசியி 6.22 இன்ச் 720×1580 பிக்சல் டிஸ்ப்ளே, 4 ஜி.பி.ரெம், 32 ஜி.பி.மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 13 எம்.பி.பிரைமரி கேமரா, 2 எம்.பி.இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி.செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக், 4030 எம்.ஏ.ஹெச்.பேட்டரி, 4ஜி வோல்ட், வைபை, ப்ளூடூத, யு.எஸ்.பி. ஆகியவை காணப்படுகின்றமையே இதன் சிறப்பம்சங்களாகும்.

இந்தியாவில் விவோ Y93 ஸ்மார்ட் தொலைபேசியை 13,990 இந்திய ரூபாய் விலைக்கு விற்பனை செய்வதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.