சூர்யா-37 படத்தின் அசத்தலான பெர்ஸ்ட் லுக், டைட்டில் வெளியானது!

சூர்யா-37 படத்தின் அசத்தலான பெர்ஸ்ட் லுக், டைட்டில் வெளியானது!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சூர்யா தற்போது தனது 37 ஆவது படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருப்பது இப்படத்தின் தகவல்களைத்தான்.

லைக்கா புரொடக்ஷனின் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் டைட்டில் மற்றும் பெர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வகையில், இப்படத்திற்கு ‘காப்பான்’ என பெயரிடப்பட்டுள்ளது. டைட்டிலோடு வெளியாகியுள்ள பெர்ஸ்ட் லுக் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டுள்ளது.

பெர்ஸ்ட் லுக்கை வைத்து பார்க்கும் போது காப்பான் நாட்டைக் காக்கும் வீரனுக்கான கதைக்களத்தைக் கொண்டிருப்பதாக அறிய முடிகிறது.

இப்படத்தில் மொகன்லால் மற்றும் ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.