இலங்கைக்கான பிரித்தானியாவின் ஆயுத விற்பனையை நிறுத்துவதில் வெற்றிகரமாக செயற்பட்டு வரும் Kent ஒருங்கிணையாளார்…..

இலங்கைக்கான பிரித்தானியாவின் ஆயுத விற்பனையை நிறுத்துவதில் வெற்றிகரமாக செயற்பட்டு வரும் Kent ஒருங்கிணையாளார்…..

​இலங்கைக்கான பிரித்தானியாவின் ஆயுத விற்பனையை நிறுத்தும் பொருட்டு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அதனை பிரித்தானிய பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் செயல் திட்டம் தமிழர் தகவல் மையத்தினால் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.

​இச் செயற்திட்டத்தின் kent பகுதிக்கான ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டு வரும் மயூரன் தாமோதரம்பிள்ளை தலைமையில் சிவசுதன், இராகவன், சுரேந்திரராஜ், ஜனகன், சயந்தன், கஜானன், நிருஷன், கோகுலகிருஷ்ணன் ஆகிய செயற்பாட்டாளர்கள் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறும் நோக்குடன் அவர்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறார்கள்.

​இவர்களை சந்தித்த பின் canterbury Mp- Rosie Duffield, Sittingborne mp- Gordon Henderson, ஆகியோர் நேரடியாகவே Early Day Motion (1480) இல் தமது கையொப்பத்தினை இட்டு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் Faversham, Gillingham, Sevenoaks, Tonbridge, Tonbridge wells ஆகிய தொகுதி பாராகளுமன்ற உறுப்பினர்களை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இது சம்மந்தமாக att.mayu@ gmail.com என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொண்டு இச் சந்திப்புக்கு உதவுமாறு அப்பகுதியில் வசிக்கும் தாயக மக்களின் உதவியினை வேண்டி நிக்கிறார்கள் இச்செயல் திடத்தை முன்னெடுக்கும் ஒருங்கிணைபாளர்கள்