பண்டாரநாயக்க கொள்கைகளை அறிந்த ஒருவராலேயே ஸ்ரீ.சு.க காப்பாற்ற முடியும்!

இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.பண்டாரநாயக்கவின் கொள்கைகளை மதித்து அதனை பின்பற்றி நடக்கும் ஒருவராலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சிறந்த முறையில் வழிநடத்த முடியுமென அக்கட்சியின் கடுவெல தொகுதி அமைப்பாளர் ஜீ.எச்.புத்ததாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி பலமிழந்த கட்சியாக மாறி வருகின்றது. ஆகையால் அக்கட்சியின் தலைமைதுவத்தில் மாற்றம் ஏற்படவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அந்தவகையில் கட்சியை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கு பண்டாரநாயக்காவின் கொள்கைகளை நன்கு அறிந்து, அதனை பின்பற்றி நடக்கும் ஒருவரால் மாத்திரமே முடியுமெனவும் புத்ததாச சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தினால் மாத்திரமே ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை பாதுகாக்க முடியுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.