ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிரால் நகரில் உள்ள குல்ஷன்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தனர்.

அவர்களை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதையடுத்து பதில் தாக்குதலை நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 3 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

இதன்போது இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்ததாக பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயங்கரவாதிகள் நடமாட்டத்தை அவதானிக்கும் முனமாக தொடர்ந்தும் அவ்விடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.