சபரிமலை விவகாரம் : ஒருவர் பலி 15 பேர் வரையில் காயம்!

கேரள மாநிலத்தில் சபரிமலை கோயில் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட கலவரங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் குறைந்தது 15 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

(புதன்கிழமை) பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் இடையே நடைபெற்ற மோதலில் காயமடைந்த ஒருவரே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது குறித்த நபர் மீது கற்கள் வீசப்பட்டதைத் தொடர்ந்து அவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை கோயிலுக்கு உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் அனைத்து வயதுப் பெண்களும் சென்று வரலாம் என அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து கோயிலுக்குள் 40 வயது நிரம்பிய இரு பெண்கள் முதன்முறையாகச் சென்றதையடுத்து அங்கு வன்முறை வெடித்துள்ளது.

இதேவேளை குறித்த பெண்கள் கோயிலுக்குச் சென்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.