பத்தரமுல்லை சீலரத்ன தேரர் கிளிநொச்சியில் நிவாரண பணி

இன்று பன்னிரண்டு மணியளவில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜன சேத பெரமுன கட்சியின் முன்னள் ஜனாதிபதி வேட்பாளரான பத்தரமுல்லை சீலரத்ன தேரர் கிளிநொச்சி உதயநகர் கிழக்குப்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் அறுபது குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார்

இதன் போது கருத்து தெரிவித்த தேரர் இங்கு இவளவு கஷ்டத்தில் மக்கள் இருக்கிறார்கள் மக்களின் வாக்குகளில் தெரியான தமிழ் பிரதி நிதிகள் என்ன செய்கின்றார்கள் வடக்கு கிழக்கு ,மலையகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுபினர்களின் பிள்ளைகள் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் நல்ல கல்லூரிகளில் கல்வி கற்கின்றார்கள் இவர்களில் பிள்ளைகள் தமது வசதிக்கேற்றவாறு பிள்ளைகளை கர்பிகின்றார்கள் எனவும் குறிபிட்டார்.