பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் வெளிவந்துள்ள செய்தி!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான எவ்வித அதிகார அனுமதியும் இன்னும் தமக்கு கிடைக்கவில்லை என இந்திய விமான நிலையங்களின்அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சின் அனுமதியை இதன் நிமித்தம் தாம் எதிர்பார்த்து கொண்டிருப்பதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்திய சிவில் விமான ராஜாங்க அமைச்சர் ஜயன்ட் சிங்ஹா, இது தொடர்பில் ஏற்கனவே இலங்கையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.

எனினும் வெளியுறவுத்துறை அமைச்சின் அனுமதியே கிடைக்கவில்லை என்று இந்திய சிவில் விமான அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் அரசியலமைப்பு பிரச்சினை காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளரின் கருத்து இன்னும் வெளியாகவில்லை.