நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை!

நாமல் குமார ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நீதிமன்றம் (வெள்ளிக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கொலைச் சதித்திட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கே நாமல் குமாரவிற்கு இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் இடம்பெற்றதாக குரல் பதிவொன்றை வெளியிட்டு நாமல் குமார பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்திருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவை கைது செய்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.