பொதுஜன பொறியியல் முன்னணியினரால் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீர் செய்யும் பணி

இலங்கை பொதுஜன பொறியியல் முன்னணியினரால் கிளிநொச்சியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீர் செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் வெள்ளத்தால் இவ்வாறு சேதமாகிய தற்காலிக வீடுகளை புனரமைக்கம் பணியில் குறித்த குழுவினர் ஈடுபட்டனர்.

பொறியியலாளர்கள் உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு குறித்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது சேதமாகிய வீடுகள் புனரமைக்கப்பட்டதுடன், மின்சார வசதிகளையும் மீள ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது,

இதேவேளை நாளை குறித்த பணிகள் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடதக்கது.

இதன்போது குறித்த பணிகளை முன்னெடுத்தவர்கள் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.