மோட்டார்வாகனத் திணைக்களம் 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2018 ஆம் ஆண்டில் வாகனங்களைப் பதிவுசெய்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த வருடத்தில் மோட்டார்சைக்கிள்களே அதிகமாக பதிவுசெய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, 3,39,763 முச்சக்கரவண்டிகள் கடந்த வருடத்தில் மாத்திரம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2018 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை குறைவாகும்.

2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த வருடத்தில் சுமார் 29,000 வாகனங்கள் மேலதிகமாக பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் மோட்டார்வாகன திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.