பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் இடமாற்றம் இரத்து.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் இடமாற்றம் இரத்து.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 72 பேருக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் மறு அறிவித்தல் வரும்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தரவின்படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி, பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய, 27 பிரதான பொலிஸ் பரிசோதகர்களும், 45 பொலிஸ் பரிசோதகர்கள் உட்பட பொலிஸ் அதிகாரிகள் 72 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டது

தற்போது பாதுகாப்பு செயலாளரின் பரிந்துரை மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தரவின்படி குறித்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது