புதிய கூட்டணியான ஜனநாயக தேசிய முன்னணி தொடர்பில் இன்று முடிவு!

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணியான ஜனநாயக தேசிய முன்னணி தொடர்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி இன்று முக்கிய சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போதே குறித்த தீர்மானம் எட்டப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் உறுப்பினர் ஒருவர், இக் கட்சியின் சின்னம் இன்னும் தேர்தெடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணியில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்ரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்ரஸ் மற்றும் பல சிறு கட்சிகளையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.