கட்டாயம் அமுல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி!

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சர்களால் நியமிக்கப்படும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்களின் விடயங்களில் ஜனாதிபதியின் தலையீடானது மீண்டும் ஒருமுறை பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.

அரச நிறுவனங்களின் தலைவர்களாக, பணிப்பாளர்களாக நியமிக்கப்படவுள்ளவர்கள், பல்கலைக்கழக பட்டத்தை கொண்டிருக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை கட்டாயம் அமுல்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இது, ஏற்கனவே ஐக்கிய தேசிய முன்னணியால் நியமிக்கப்பட்டுள்ள நிறுவன தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள் பதவிகளை தொடர முடியுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இதனையடுத்து குறித்த பிரச்சினை தொடர்பில் கேள்வி எழுப்பவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களின் தலைவர்களாக, பணிப்பாளர்களாக ஐக்கிய தேசியக் கட்சியின்ஆதரவாளர்கள் வந்துவிட கூடாது என்பதற்காகவே ஜனாதிபதி இந்த கடும்போக்கை நடைமுறைப்படுத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சி தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.