ஸ்ரோபரியை தொடர்ந்து திராட்சைகளிலும் ஊசிகள்!

அவுஸ்ரேலிய பேரங்காடியில் கொள்வனவு செய்யப்பட்ட திராட்சைப் பழங்களில் ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கர்ப்பிணித் தாயான Shams Alsubaiy என்பர், கடையில் வாங்கி வந்த திராட்சையை வீட்டில் வைத்துச் சாப்பிட்டபோது அவருடைய கையில் முள்போன்று ஏதோ குத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவருடைய கணவருடன் திராட்சைகளை வெட்டிப்பார்த்தபோது அதில் இரண்டு ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தநிலையில் அடுத்த சில மாதங்களுக்குப் பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கப்போவதாக பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த செப்டெம்பர் மாதம் சுமார் 200 ஸ்ரோபரி பழங்களில் ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.