இலங்கை அரசாங்கத்திற்கு தெரியாமல் பறந்த முதல் விமானம்!! கலக்கத்தில் முக்கியஸ்தர்..

2ஆவது உலக மகா யுத்தத்திற்கு பின்னர் முதல் தடவையாக திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி பிரத்தியேக ஜெட் ரக விமானம் ஒன்று உத்தியோகபூர்வமாக புறப்பட்டுள்ளது.

இரு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு கிழக்கு மாகாணத்துக்கு சிங்கப்பூரிலிருந்து VP-CPY என்ற விமானத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்ற சிங்கப்பூர் முதலீட்டாளர்கள், இன்று திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூரை நோக்கி புறப்பட்டனர்.

அதன்படி 2ஆவது உலக மகா யுத்தத்திற்கு பின்னர் திருகோணமலையிலிருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்ட முதலாவது விமானமாக குறித்த ஜெட் விமானம் பதிவாகியது.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம தலைமையிலான குழுவினர் இதன்போது முதலீட்டாளர்களை சீனக்குடா விமான நிலையத்தில் வைத்து வழியனுப்பிவைத்தனர்.

சிங்கப்பூர் நாட்டு வர்த்தக முதலீட்டாளர்கள் குழுவினர் இரு நாட்கள் விஜயம் ஒன்றை கிழக்கு மாகாணத்துக்கு மேற்கொண்டிருந்தனர்.

நேற்று முன்தினமும், நேற்றும் சிங்கப்பூர் நாட்டு முதலீட்டாளர்கள் திருகோணமலையில் தங்கியிருந்து பல இடங்களுக்கு விஜயம் செய்ததுடன் பல சந்திப்புக்களிலும் ஈடுபட்டனர்.

இதன்போது கிழக்கு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்களில் குறித்த முதலீட்டாளர்கள் பங்கேற்றிருந்ததுடன், கிழக்கின் சுற்றுலா , மீன்பிடி, வர்த்தக உடன்படிக்கைகள் ஊடாக கிழக்கு மாகாணத்தில் சிங்கப்பூர் நாட்டின் முதலீடுகளை கொண்டுவருவதற்கான ஒரு விஜயமாகவும் இது அமைந்திருந்தது.

இது இலங்கையின் அரசியல் பிரமுவர்களிற்கு பாரிய இராஜதந்திர சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.