எதிர்க்கட்சி தலைவர் விவகாரம்; சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!

எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே தீர்மானம் ஒன்றை மேற்கொள்வாரென நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் ஒரு தொகுதியினருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், எதிர்க்கட்சி தலைவர் பதவி விடயத்தில் சட்ட ஒழுங்கின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.