எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்க வைப்பது குறித்து மாவை!

நாங்கள் எதிர்க்கட்சிப் பதவி விவகாரத்தில் இப்போதே எவரொருவர் தொடர்பிலும், எவ்வித கருத்துக்களையும் கூற விரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் கலந்தாலோசித்து தீர்வு காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் நாளை கூடவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பதாக இடம்பெறும் எமது கட்சிக் கூட்டம், கட்சித் தலைவர்கள் கூட்டம் என்பவற்றில் பேச்சு நடத்தித் தீர்மானம் எடுப்போம் எனவும் அவர் மேலும் கூறினார்.