கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இலக்கம் 61 உதயநகர் கிழக்கில் சிறு வியாபாரம் செய்து வரும் ஐயம்பிள்ளை நாகேசு வயது 74 என்பவரே இன்று(07) காலை தூக்கில் தொங்கிய நிலையில் உறவினர்களால் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரணம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை திடீர் மரணவிசாரணை அதிகாரி, பொலீஸார் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.