அமரர் அருள்சாமியின் பூதவுடல் தீயுடன் சங்கமம்!

முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் காலஞ்சென்ற சந்தனம் அருள்சாமியின் பூதவுடல் ஹற்றன் டன்பார் மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) தகனம் செய்யப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருமான சந்தனம் அருள்சாமி சுகயீனமுற்று டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இயற்கை எய்தினார்.

அன்னாரது பூதவுடல் ஹற்றனில் உள்ள அவரது வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தநிலையில், அன்னாரின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலதரப்பினரும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இ.தொ.காவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஆலோசகர் முத்து சிவலிங்கம், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் தமது அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.