கிளிநொச்சியில் பாதுகாப்பற்றி கிணற்றிலிருந்து 10 வயது சிறுமியின் சடலம் மீட்பு

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் பாதுகாப்பற்றி கிணற்றிலிருந்து 10 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித் சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

அவரது இல்லத்தில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளச்சென்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் 10 வயதான கிளிநொச்சி பாரதி வித்தியாலய மாணவியான புவனேஸ்வரன் டிலாணி என்ற சிறுமியே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த வீட்டில் தாய் தந்தை 3 பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் நிலையில் இவர்களிற்கான வீட்டுத்திட்டம் தற்போதே வழங்கப்பட்டுள்ளதாகவும் மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்த இவர்களிற்கு பெரும் கஸ்டமான நிலை காணப்படுவதாகவும் கிராமத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்களிற்கு வீட்டு்திட்டமும் தற்போதே வழங்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பான கிணறு ஒன்றை அமைத்து கொடுக்கப்பட்டிருந்தால் இச்சிறுமியின் மரணத்தினை பாதுகாத்திருக்க முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.