அங்கொட துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு

அங்கொட பிரதேசத்தில் நேற்று (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஹிலவத்தை பிரதேசத்தில் களனி கங்கைக்கு அருகில் வெற்று இடத்தில் இருந்த மோட்டார் சைக்கிள் வெல்லம்பிட்டிய பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளதுடன், பொலிஸரால் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்கொட சந்தியில் நேற்று (07) இரவு 7.35 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த 2 இனந்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

களனிமுல்ல, அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.