எதிர்க்கட்சி தலைவர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க்கட்சி தலைவராக செயற்படுவார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

சபாநாயகரின் இத்தீர்மானத்தை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்துள்ளார்.

புத்தாண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கூடியது. இதன்போதே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சபாநாயகர் நியமித்திருந்தார். இந்நியமனம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் தோற்றம் பெற்றதையடுத்து இது குறித்து தெரிவுக்குழு அமைத்து ஆராயுமாறு கோரப்பட்டது.

அதனை ஏற்ற சபாநாயகர் அது குறித்து ஆராய்வதாகவும் உறுதியளித்திருந்தார். இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் குறித்த தீர்மானத்தை இன்று வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.