மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை!

குருணாகல் பேருந்து நிலையத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று (08) காலை குறித்த பெண் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருணாகல், தோரயாய பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.