ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய போட்டியிடுவார்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், தேர்தலொன்றின் மூலம் அரசாங்கத்தின் அதிகாரத்தை பெற்றுக் கொள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தயாராகவிருப்பதாகவும், முதல் வாய்ப்பிலேயே அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.