சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை என்பது நிரூபணமாகியுள்ளது!

கடந்த கால அரசியல் நெருக்கடிகளிலிருந்து இலங்கைக்கு சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை என்பது நிரூபணமாகியுள்ளது என, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வில் இலங்கை மீதான சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் குறித்து ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினரிடையே, விவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”சர்வதேச நீதிமன்றம் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. வடக்கு- கிழக்கில் பிரச்சினைகள் நடைபெற்றுள்ளமை உண்மையே. அதனை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் இன்று இலங்கை பிரச்சினையை இலங்கையில் தீர்த்துக்கொள்ள முடியும் என்பது நிரூபனமாகியுள்ளது. சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை.

ஆனால், இதுதொடர்பில் இலங்கையிலேயே விசாரணைகளை முன்னெடுக்க முடியும். இதுதான் இந்த அரசியல் நெருக்கடியில் கிடைத்த ஒரே நன்மையாகும்” எனத் தெரிவித்தார்.