ஒஸ்ரியாவில் கடும் பனிப்பொழிவு – மூவர் பலி! நால்வர் மாயம்!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஒஸ்ரியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக இதுவரையில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காணாமல் போயுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையிலேயே, ஒஸ்ரியாவிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீதிகளில் சுமார் 2 மீற்றர் அளவிற்கு பனி சூழ்ந்துள்ளதாகவும் இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இன்று(செவ்வாய்கிழமை) பாடசாலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், கடும் பனிப்பொழிவு காரணமாக ஒஸ்ரியாவில் தங்கியுள்ள சுற்றுலாப்பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.