IPL போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெறவுள்ளதாக அறிவிப்பு

IPL போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெறவுள்ளதாக அறிவிப்பு

2019ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெறவுள்ளமையினை இந்திய கிரிக்கட் சபை உறுதி செய்துள்ளது.

இதற்கமைய மார்ச் 23 ஆம் திகதி போட்டி ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் இந்திய பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் இந்தியன் பிரிமியர் லீக் தொடர் தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்திய கிரிக்கட் சபையின் நிர்வாகக்குழுவின் தலைவரான வினோத் ராய், டெல்லியில் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.