‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் வித்தியாசமான முறை கொண்டாட்ட நிகழ்வு

அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் அஜித் ரசிகர்கள் பேனர், போஸ்டர் என கலக்கி வருகின்றனர்.

185 அடி கட்-அவுட், 108 அடி போஸ்டர் என அஜித் ரசிகர்கள் இந்த முறை வித்தியாசமான கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்தமுறை சென்னை ரோகினி திரையரங்கில் தண்ணீர் போத்தல்கள் மட்டுமே வைத்து அஜித் பேனர் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.