வவுனியாவில் தலைக்கவசம் அணியாது சென்ற பாடசாலை மாணவர்கள்!

வவுனியாவில் நகரின் மத்தியினூடாக 12.30 மணியளவில் பாடசாலை சீருடையுடன் தலைக்கவசம் அணியாது பிரபல பாடாசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சென்றமை மக்கள் மத்தியில் அதி்ர்ப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறாக தலைக்கவசம் அணியாது இன்றைய தினம் மோட்டார் சைக்கிளில் செல்லும், சென்ற மாணவர்களுக்கு எதிராக மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை வைத்துக்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைக்கு மோட்டார் சைக்கிலில் தலைக்கவசம் அணிந்து செல்லாத மாணவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைகளுக்கு மாணவ, மாணவிகள் மோட்டார் சைக்கிளில் வருவது தொடர்பாக பெற்றோர் பலர் அதிர்ப்தி தெரிவித்து வரும் நிலையில் பாடசாலை நிர்வாகம் அது தொடர்பில் கவனம் செலுத்தாமல் மாணவர்கள் பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் வருவதற்கு அனுமதி அளித்து வருகின்றனர்.

இந் நிலையில் வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்வது அதிகரித்து வரும் நிலையில் அது தொடர்பாக அதிபர்கள் கவனம் செலுத்தாமல் உள்ளமையானது வறிய மாணவர்களின் மனதளவான தாக்கத்திற்குளாக்குவதாக பெற்றோர் பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.