காதலனும் காதலியும் இணைந்த செய்த மோசமான செயல்!

எல்பிட்டியவில் நான்கு மாத சிசுவின் மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக காதல் ஜோடியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிட்டிகல வத்தஹேன- அமரகம தபால் காரியாலயத்திற்கு அருகில் கடந்த டிசம்பர் மாதம் வீதி ஓரத்தில் வீசப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.

இது தெடார்பான பொலிஸார் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய காதல் ஜோடியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக எல்பிட்டிய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு மற்றும் பிட்டிகல பொலிஸார் கொடுத்த அறிவித்தலுக்கமைய கருக்கலைப்பு செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது எல்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் இதுபோன்ற நோயாளி பெண்ணொருவர் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

அப்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் அப்பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாபலகம பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது யுவதியும் நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான இளைஞனும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவரது காதலனால் வாங்கி கொடுக்கப்பட்ட கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட்ட பிறகு, குறித்த பெண்ணின் வயிற்றில் இருந்த கரு கலைந்துள்ளது. காதலனுடன் சென்று கருவை வீசியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் மூலம் வெளிவந்துள்ளது.