தேர்தல் பிற்போக பிரதான இரண்டு கட்சிகளுமே காரணம்!

மாகாணசபை தேர்தல் பிற்போக பிரதான இரண்டு கட்சிகளுமே காரணமாகும் என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சபையில் குற்றஞ்சாட்டினார்.

மேலும் எல்லை நிர்ணய அறிக்கையை காரணம் காட்டி பிரதான கட்சிகள் இரண்டும் மாகாண சபைகள் தேர்தலை பிற்போடும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான மீளாய்வு குழுவின் அறிக்கை தாமதமாகியுள்ளமை தொடர்பாக எதிர்க்கட்சியினரால் கேள்விகள் எழுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து சபையில் ஏற்பட்டிருந்த வாத விவாதங்களின் போது தனது கருத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்தார்.