நியமிக்கப்பட்ட ஆளுநர்களில் இருவரின் பதவியில் மாற்றம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட 9 மாகாண ஆளுநர்களின் இருவரின் பதவியில் சிறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது.

அந்தவகையில் ஊவா மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட கீர்த்தி தென்னகோன் தற்போது தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தையான மார்ஷல் பெரேரா ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

03 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டவேளை ஊவா மாகாணத்தின் ஆளுநராக கீர்த்தி தென்னகோன் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.