கிளிநொச்சியில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பின் பின்னர் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் கள நிலைமைகள் தொட்பில் இன்று வடமாகாணஆளுனர் கிளிநாச்சியில் விசேட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

குறித்த கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநாச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்களம் சார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குறித்த கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டது.

இதன்புாது இரணை மடு குளத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தொடர்பில் ஆராய விசேட குழு நியமிக்கப்பட்டதாகவும், அதனை கடந்த ஆளுநர் நீக்கியமை தொடர்பிலு்ம, அந்த விசாரணை கைவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் ஆளுநரின் செயலாளர் இளங்கோவனை விளக்கமளிக்குமாறு ஆளுநர் பணித்தார். இரணைமடுகுளத்தினால் வெள்ளம் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதா, எனவும் அதன் முகாமைத்துவம் தொடர்பிலும் விசாரணை செய்ய புதிய விசாரணைக் குழுவை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நியமித்துள்ளதாக இதன்புாது தெரிவிக்கப்பட்டது.

ஓய்வுப்பெற்ற வடக்கு கிழக்கு மாகாண அமைச்சின் ஒன்றின் செயலாளரைாக இருந்த பொறியியலாளர் இரகுநாதன், நியாப் திட்டத்தில் பணியாற்றி இந்திரசேன, மற்றும் ஆளுநரின் சிபார்சுக்கு அமைய மொறட்டுவ பல்கலைகழக பொறியியலாளர் ஒருவருமாக மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக் குழுவினர் இரணைமடு விசாரணை அறிக்கையை இரண்டு வாரங்களுக்கு சமர்பிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் மலேரியா எச்சரிக்கை விடுக்கப்பட்ட விடயம் தொடர்பிலும் ஆளுநர் இதன்புாது தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மலேரியாவை பரப்பும் நுளம்புகள் அடையாளம் காணப்படவில்லை எனவும், தாம் தொடர்ந்தும் குறித்த நுளம்புகள் இங்கு உள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும்.

அதற்கான முன் எச்சரிக்கை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியர் ஜேயராயா தெரிவித்தார். குறித்த செயற்பாட்டை பாராட்டிய வடமாகாண ஆளுநர், கிளிநொச்சி மாவட்டம் முன்னுதாரணமாக உள்ளமை தொடர்பிலும் கருத்து தெரிவித்தா்ர.

தொடர்ந்து கிளிநொச்சி யாழ் மாவட்ட பிரதி நீர்பாசன பணிப்பாளர் என் சுதாகரன் கருத்து தெரிவிக்கையில்,

ரணைமடு குள விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டால் அதற்கு தாம் தயாராக உள்ளதாக தெரிவித்தார். குறிப்பிடப்படுகின்றவாறு எவ்வித பாதகமான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை எனவும், விசாரணை குழுவிற்கு விளக்கமளிக்கும் வகையில் சகல விபரங்களும் திரட்டப்பட்டு கைவசம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பன்னங்கண்டி பிரதேசம் மற்றும் இரணைமடு குளம் ஆகியவற்றை வடமாகாண ஆளுநர் பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது