சர்வதேச தலையீட்டின் மூலமே தமிழர்களுக்கு தீர்வு!

சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே தமிழர்களுக்கு அரசியல் தீர்வு சாத்தியப்படும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது.

குறித்த நினைவுதின நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”இந்த படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. அதேபோல இலங்கை அரசாங்கம் செய்த இனப்படுகொலைகளுக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.

இன்று அரசியல் தீர்வு கேள்விக்குறியாக உள்ள நிலையில் சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே நாமும் அரசியல் தீர்வை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழர்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற நிலைமை ஏற்பட வேண்டும் அதனை நாம் வென்றெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.