ரூபாயின் பெறுமதியை ஸ்திரப்படுத்த இந்தியா உதவி!

நாட்டில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துவரும் ரூபாயின் பெறுமதியை ஸ்திரப்படுத்த இந்தியா உதவி செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (வியாழக்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இந்த விசேட அறிவிப்பை வெளியிட்டார்.

பெரும் பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நாட்டை கட்டியெழுப்பும் வகையில் இந்திய மத்திய வங்கி 400 மில்லியன் டொலர் நிதியை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பிரதமர் நியமனத்தை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அரசியல் சதியால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு முன்பிருந்த நிலையிலும் உன்னத இடத்துக்கு கொண்டு செல்லும் பொறுப்பு தங்களுடையது எனத் தெரிவித்த பிரதமர், ஆனால் அது அவ்வளசு இலகுவான விடயமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்களின் நலனை கருத்திற்கொண்ட வகையிலான வரவு-செலவு திட்டமொன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.