ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் – 4.6ஆக பதிவு!

ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஒன்று இன்று (வியாழக்கிழமை) காலை உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தால் இலேசாக வீடுகள் அதிர்ந்துள்ளன.

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற்குமுதல் கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.