தேர்தலுக்கு வாருங்கள்! மஹிந்த சவால்

நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வோம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) கூடியது.

இதன்போது புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”நீங்கள் தேர்தலுக்கு வாருங்கள். நாம் தேர்தலில் சந்திப்போம்.

அதன்போது, அரசியலமைப்பு தொடர்பான எமது யோசனையை நாம் முன்வைக்கிறோம். நீங்கள் உங்கள் யோசனையை முன்வையுங்கள். மக்கள் தீர்மானிக்கட்டும்.

நாடாளுமன்றத்தையும், மக்களையும் ஏமாற்ற வேண்டாம். நீங்கள் செய்ய போவதை கூறுங்கள். நாம் மக்கள் முன்னிலையில் சென்று மக்களின் ஆணையை பெற்று அரசியலமைப்பை நிறைவேற்றுவோம்” எனத் தெரிவித்தார்.