ஜனாதிபதியான பின்னர் முதன் முறையாக பிலிப்பைன்ஸுக்கு செல்லும் மைத்திரி!

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 15ஆம் திகதி பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனவரி 19ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பிலிப்பைன்ஸில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது மைத்திரிபால சிறிசேன, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிக்கோ டட்டர்டேவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன் இலங்கையின் ஜனாதிபதி, பிலிப்பைன்ஸில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

ஏற்கனவே விவசாய அமைச்சராக இருந்தபோது மைத்திரிபால சிறிசேன, பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்தநிலையில் ஜனாதிபதியானதும் மைத்திரிபால அந்த நாட்டுக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.