நியூஸிலாந்து அணி வெற்றி.

இலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையலான இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

ஒக்லன்ட், ஈடன் பார்க் மைதானத்தில் இன்று இடம்பெற்ற போட்டிய நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

இதன்படி களம் இறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பாக Doug Bracewell 44 ஓட்டங்களையும் Scott Kuggeleijn 35 ஓட்டங்களையும் Ross Taylor 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக கசுன் 3 விக்கெட்டுக்களையும் மலிங்க 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.