இன்று (11.1.2019)அமைச்சர்கள் மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ரவீந்திர சமரவீர தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக பதவியேற்றார்.

வீ.இராதாகிருஷ்ணன் அமைச்சரவை அந்தஸ்தற்ற, விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சராக அப்துல்லா மஹ்ரூப் பதவியேற்றுக்கொண்டார்.