இலங்கையில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை!

இலங்கையின் பல மாகாணங்களில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை!

இலங்கையின் பல மாகாணங்களில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி கிழக்கு, ஊவா, மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென தெரிவிக்கப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் பிற்பகல் வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், குறித்த பிரதேசங்களில் காற்று வீசக்கூடுமென்பதால், மின்னல் தாக்கங்களிலிருந்து ஏற்படக்கூடிய பாதிப்புக்களிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களிடம் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இலங்கையின் கடற்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சமயங்களில் பலத்த காற்று வீசக்கூடுமென்றும், இதன்காரணமாக கடலுக்கு செல்பவர்களும், மீனவர்களும் அவதானமாக செயற்படும்படியும் அத்திணைக்களம் எச்சரித்துள்ளது.