ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் சஜித்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ களம் இறங்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இதனை தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி – இறக்குவானை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ஹேஷா விதானகே இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டிய அவசியம் தமக்கு கிடையாது.

ஏனெனில் தமது ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ களம் இறங்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு வருகின்றது.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அந்த கட்சியின் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சபாநாயகர் கருஜயசூரிய ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார் என ஒரு தரப்பினர் கூறிவருகின்ற நிலையில், சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாகவும் ஒரு தரப்பினர் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.