யாழில் தைப் பொங்கல் தினமான இன்றும் வாள்வெட்டு!

தைப் பொங்கல் தினமான இன்றும் யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் கோயில் வளாகத்திலேயே இந்த வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் தாக்குதல் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகாத போதும், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவ்விடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

உழவர்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் இன்றைய நன் நாளில் இதுபோன்ற தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இருப்பது அப்பகுதி மக்களுக்கு அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மகிழ்வாக இருக்க வேண்டிய இந்நாளில் இதுபோன்ற வன்முறைகள் அமைதியைக் கெடுப்பதாக அமைகின்றது என்றும் அங்கிருந்த பெரியவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.