வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 60 மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

பாடசாலை முதல்வர் பேரம்பலம் தலமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அனைத்து பல்கலைக்கழகங்களிலிருந்தும் மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.

நிகழ்வில் கருத்து தெரிவித்த அதிபர்,
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களினால் இங்கு கல்வி கற்றம் மாணவர்களிற்கு இவ்வாறான உதவிகள் கிடைத்தமைக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவித்த தேரர்,
நாட்டில் கல்வி மாற்றம் தொடர்பில் நாம் புாராடி வருகின்றோம். இந்த நிலையில் இங்குள்ள மாணவர்களிற்கு உதவி செய்ய வந்தோம் என தெரிவித்தார்.

கருத்து தெரிவித்த பல்கலை மாணவன்,
இன்று கல்வி முறைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

இவ்வாறான பாடசாலைகளில் உள்ள மாவணவர்களின் நன்மை கருதியே இவ்வாறான புாராட்டங்களை முன்னெடுத்த வருகின்றோம். இலங்கையில் கல்வி முறைக்கு எதிரான போராட்டமாக அல்ல.

அந்த கல்வி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றோம். எம்மிடமிருந்து பெறப்படும் வரிக்கு எமக்கு போதுமான கல்வியை வழங்குங்கள் என்பதே எமது கோரிக்கை. எல்லோருக்கும் வை்ததியராக, பொருளியலாளராக விருப்பம் உண்டு.

ஆனால் எல்லோராலும் ஆக முடிவத்தில்லை. கொஞ்சபேரையே பல்கலைக்கழகத்திற்கு அனுப்புகின்றனர். இந்த நிலையில்தான் கல்வி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். தனியார் கல்வி முறைமையை மாற்றி அரச கல்லி முறையை மேற்கொள்ளுமாறு நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

கடந்த சில ஆண்டுகளாக சைட்டம் என்ற தனியார் கல்வி முறைக்கு எதிர்ப்பு வெளியிட்டு பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம்.

அந்த போராட்டத்தின் பின்னர்தான் தனியார் கல்லூரி மூடப்பட்டு அரச கல்லூரியாக இடம்பெற்று வருகின்றது. அவ்வாறு அன்று தனியார் மயமாக்கப்பட்டிருந்தால் பல லட்சம் செலவு செய்து எல்லோராலும் வைத்தியராகியிருக்க முடியாது.

இன்று நாட்டில் மற்றுமொரு சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது. அச்சட்டத்தில் ஆசிரியர்களிற்கு அரசின் ஊடாக ஊதியம் வழங்குவதாகவும், பாடசாலையின் ஏனைய செலவுகளை வேறேதும் வளங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் வகையில் குறிதத் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்திற்கு எதிராகவும் நாம் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளோம். அந்த சட்டம் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளிற்கு பொருத்தமற்றது என்பதனையும் இங்கு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடதக்கது.