ரைசா நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் நடித்த ரைசா வில்சன், யுவன் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரித்திருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் யுவன் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றில் ரைசா வில்சன் நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தின் இயக்குநர் மணி சந்திரன் தவிர, ஒளிப்பதிவாளர் எழில் அரசு, கலை இயக்குநர் ஏ.ஆர்.ஆர்.மோகன், படத்தொகுப்பாளர் அர்ஜுனா நாகா ஏ.கே. ஆகியோர் இத்திரைப்படத்தில் புதுமுகங்களாவர்.

யுவன் ஷங்கர் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இத்திரைப்படத்திற்கு ‘ஆலிஸ்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டு அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் கதாநாயகன் உள்ளிட்ட ஏனைய நடிகர், நடிகைகளின் தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.