உலக வங்கி தலைவர் பொறுப்பிற்கு இந்திரா நூயி?

உலக வங்கி தலைவர் பொறுப்பிற்கு இந்திரா நூயி?

உலக வங்கி தலைவர் பொறுப்பிற்கு இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக நாடுகளில் வறுமையை குறைக்கவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் செயல்பட்டு வரும் உலக வங்கியில் 189 நாடுகள் அங்கத்தினராக உள்ளன.

உலக வங்கியின் தலைமையகம் அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் உள்ளது. இந்த வங்கியின் தலைவராக இருக்கும் ஜிம் யோங் கிம், இம்மாத இறுதியில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து, உலக வங்கியின் தலைவர் பொறுப்புக்கு முன்னிறுத்தும் நபரை தேர்வு செய்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், உலக வங்கி தலைவர் பொறுப்புக்கு இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பிறந்த 63 வயதான இந்திரா நூயி, பெப்சி நிறுவன தலைமை செயல் அதிகாரியாக 12 வருடமாக பதவி வகித்தார். இதன் பின்னர் குறித்த பதவியில் இருந்து அவர் கடந்த ஆண்டு விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.