பசுபிக் கடற்பிராந்தியத்தில் ராட்சத வெள்ளை சுறா!

பசுபிக் கடற்பிராந்தியத்தில் ராட்சத வெள்ளை சுறா!

வட பசுபிக் கடற்பிராந்தியத்தைச் சேர்ந்த ராட்சத வெள்ளை சுறா ஒன்றை மிகவும் நெருக்கமாக கண்டுள்ள முக்குளிப்போர் அணியொன்று, அதனை நேரலையில் அனைவருக்கும் ஔிபரப்பியுள்ளனர்.

ஹவாய் தீவுக் கடலில் முக்குளிப்போரில் சிலர் அந்த ராட்சத பெண் சுறாவை தொடக்கூடிய அளவுக்கு மிகவும் நெருக்கமாக சென்றனர்.

குறித்த சுறா 20 அடி நீளமும், சுமார் இரண்டரை தொன் எடையை கொண்டிருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

குறித்த ராட்சத சுறா சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட டீப் புளூ போன்ற சுறா என்று நம்பப்படுகிறது.

திமிங்கிலங்கள் புலி சுறாக்களை உட்கொண்ட தருணத்தில் ஔிப்படம் எடுத்தபோது, இந்த ராட்சத பெண் சுறா வந்ததாக முக்குளிப்போரில் ஒருவரான ஓசன் ராம்சே தெரிவித்துள்ளார்.