தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் கைது?

தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரித்தானியாவில் கைது?

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பிரித்தானியாவில் வைத்து கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் தமிழர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் போர்குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வினோத் பெரேரா மற்றும் பல்லியகுரு ஆகிய இருவர் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நாளை(திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதன்போது பிரியங்க பெர்னாண்டோ கைது செய்யப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாளைய தினம் வழக்கில் ஆஜராகாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மேற்கொண்ட போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான காணொளிகளை சனல் 4 தொலைகாட்சி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.