100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’!

தனுஷ் – சாய்பல்லவி நடித்த ‘மாரி-2 படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் (10 கோடி) பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

அந்தவகையில் விரைவான 100 மில்லியன் (18 நாட்களில்) பார்வையாளர்களைக் கடந்த முதல் தமிழ் பாடல் என்ற பெருமையை இந்த பாடல் பெற்றுள்ளது.

பாடகி தீ உடன் தனுஷ் எழுதி பாடிய இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.

2011 இல் வெளியான தனுஷின் ‘வை திஸ் கொலவெறி’ பாடல் யூடியூப்பில் இதுவரை 173 மில்லியன் பார்யைாளர்களைக் கடந்து தமிழ் சினிமாவில் முதலிடத்தில் உள்ளது. இப்பாடலை வேறு எந்தப்பாடலும் இதுவரை முறியடிக்கவில்லை.

இப்பாடலுக்கு அடுத்தபடியாக விஜய்யின் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலை சுமார் 90 மில்லியன் பேருக்கு மேல் பார்த்திருக்கிறார்கள்.

இதையடுத்து பிரபுதேவாவின் ‘குலேபா’ பாடலை 87 மில்லியனுக்கும் மேல் பார்த்துள்ளதோடு கனா படத்தின் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடலை 80 மில்லியனுக்கு மேல் பார்த்துள்ளார்கள்.

‘ரவுடி பேபி’ பாடல் இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் இப்போது பிரபல்யமடைந்துள்ள நிலையில் பார்வையார்களின் எண்ணிக்கையில் குறைவின்றி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் ‘வை திஸ் கொலவெறி’ பாடலின் னயசமுதலிடம் என்ற வரலாற்று சாதனையை விரைவில் பிடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.